gospel meetings
Testimonies of Deliverance Church
தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தின கர்த்தர்!
நான் தபால் தந்தி துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்று இருக்கிறேன். எனக்கு நீண்ட நாட்களாக இரு கால் மூட்டுகளிலும் அதிக வேதனை, வலி இருந்து வந்தது. Rev.Dr.A.ஜாஷ்வா அவர்கள் நடத்துகிற மதுரை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் காலை நேரத்தில் என்னால் எழும்ப முடியவில்லை. எப்படி கூட்டத்திற்கு செல்வேன் என கவலைப்பட்டேன். மூட்டு வலியுடன்தான் கூட்டத்திற்கு வந்தேன். ஜெப வேளையில் என்னுடைய தள்ளாடுகிற முழங்கால்களை கர்த்தர் தாமே பலப்படுத்தினார். இப்பொழுது மூட்டு வலி இல்லை. நல்ல சுகத்தைக் கொடுத்த கர்த்தரை துதிக்கிறேன்சகோ. பிரிட்டோ நாகராஜன் , மதுரை
சிறுநீரகக் நோயிலிருந்து பாதுகாத்து வரும் பரம தேவன்!
கடந்த நாளில் எனது மனைவிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்கள். பரிசோதனை செய்த மருத்துவர் உடனடியாக டயாலிசீஸ் செய்யும்படி கூறினார். டயாலிசீஸ் செய்ய வேண்டுமென நினைக்கும்பொழுது எங்கள் மனம் மிகவும் கலங்கியது. இந்நிலையில் எங்கள் வீட்டிற்கு அன்பரின் ஊழிய மாதப்பத்திரிக்கை வந்தது. அதில் Rev.Dr.A.ஜாஷ்வா அவர்கள் “செய்யப்படாத அதிசயங்களை கர்த்தர் உங்கள் வாழ்விலும் செய்வார்” என்ற தலைப்பில் தேவ செய்தியை எழுதியிருந்தார்கள். அந்த செய்தியை ஜெபத்தோடு வாசித்தேன். கர்த்தர் எனது விசுவாசத்தை அதிகரிக்க செய்தார். அந்த புத்தகத்தை வைத்து எனது மனைவிக்காக ஜெபித்தேன். மருத்துவர்கள் டயாலிசீஸ் செய்யும்படி சொல்லியிருந்தார்கள். ஆனால் நாங்கள் இதுநாள்வரை டயாலிசீஸ் செய்யவில்லை. கர்த்தர் எனது மனைவியை அற்புதமாய் பாதுகாத்து வருகிறார். இப்பொழுது நன்றாக சாப்பிடுகிறார்கள், எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். எனது மனைவி என்னிடம் சொன்னபடியே பொருத்தனை காணிக்கையை பாஸ்டர் அவர்களிடம் தருகின்றேன். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்! திரு.விக்டர் பழனிசாமி, சென்னை
ஜெப வேளையில் சுகம் பெற்றேன்
எனக்கு கடந்த சில நாட்களாக மூட்டு வலி ஏற்பட்டு அதிக கஷ்டப்பட்டு வந்தேன். இந்நிலையில் உங்கள் விடுதலையின் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். ஜெப வேளையில் Dr.ஜேன் ஜாஷ்வா அவர்கள் தேவனால் ஏவப்பட்டு “மூட்டு வலி உள்ளவர்களுக்கு இந்த வேளையில் கர்த்தர் சுகத்தை தருகின்றார்” என்று கூறினார்கள். அந்த நொடிப்போழுதே எனக்கிருந்த மூட்டு வலி நீங்கியது. சுகம் தந்த தேவனை துதிக்கின்றேன். திருமதி. ராணி, சென்னை
அற்புத சுகத்தைத் தந்த அதிசய தேவன்!
எனது மூத்த மகனுக்கு திருமணமாகி அயல்நாட்டில் வேலை பார்த்து வருகின்றான். அவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டான். மகனுக்கு பேச்சு வரவில்லை, தொண்டையிலும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த இக்கட்டான நிலையில் எனது மருமகளும் மகன் கூடவே இருந்தாள். மகன் நிலை குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். நான் மிகுந்த கவலையடைந்தேன். உடனடியாக Rev.Dr.A.ஜாஷ்வா அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மகன் நிலையை குறித்து கூறினேன். அவர்கள் “அழாதீர்கள் மகனுக்கு ஒன்றும் ஆகாது என தைரியப்படுத்தி ஜெபித்தார்கள்” அதன்பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஜெபத்தை கேட்டு கர்த்தர் மகனுக்கு நல்ல சுகத்தை தந்தார். கொரோனோவிலிருந்து மகன் மீண்டான். அதுமாத்திரமல்ல, பேசவும் ஆரம்பித்தான், தொண்டையில் இருந்த பிரச்சனையும் நீங்கியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! திருமதி. டெல்பின்மேரி, சென்னை.
தடைகள் நீங்கியது! திருமணம் ஆசீர்வாதமானது!
எனது மகனின் திருமணம் காலதாமதமாகி கொண்டு இருந்தது. அவன் திருமணத்திற்காக பாஸ்டர் அவர்களிடம் ஜெபிக்கும்படி சொன்னேன். கர்த்தர் அவர்கள் ஜெபத்தை கேட்டு தடைகளை நீக்கினார். கடந்த ஏப்ரல் மாதம் பெங்களுரில் திருமணம் ஆசீர்வாதமாக நடைபெற கர்த்தர் கிருபை செய்தார். நல்லதொரு மருமகளை கர்த்தர் கொடுத்தார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஜெபத்தைக் கேட்டு அற்புதம் செய்த தேவனை துதிக்கின்றேன். திருமதி.பிரதீபா,சென்னை
தடைகள் நீங்கியது! திருமணம் ஆசீர்வாதமானது!
எனது இரண்டாவது மகனுக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே போனது. அவனுக்காக பாஸ்டர் ஜாஷ்வா அவர்களிடம் சொல்லி ஜெபித்தோம். கர்த்தர் அவர்கள் ஜெபத்தைக் கேட்டு மகனின் திருமணத்தை மிகுந்த ஆசீர்வாதமாக நடத்தி தந்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!திருமதி. டெல்பின்மேரி, சென்னை.
சமாதானத்தை தந்த சமாதானப் பிரபு
என் மனதில் இரண்டு வருடமாக ஒருவித மனபாரம் இருந்துகொண்டு, என்னை அழுத்திக்கொண்டே இருந்தது. என்னால் இந்த மனபாரத்திலிருந்து விடுதலை ஆகமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். Rev.Dr.A.ஜாஷ்வா அவர்கள் மதுரையில் உங்கள் விடுதலையின் நாள் கூட்டம் நடத்துவதை அறிந்து கூட்டத்திற்கு வந்தேன். ஜெப வேளையில் சகோதரர் அவர்கள் பெலவீனமான இடத்தில் கைகளை வைத்து ஜெபிக்கச் சொன்னார்கள். அப்பொழுது நான் என் இதயத்தில் கையை வைத்து ஜெபித்தேன். அந்த நொடிப் பொழுதில் என் மனபாரம் நீங்கியது. ஒரு நிறைவான சமாதானம் என்னை நிரப்பியதை நன்கு உணர்ந்தேன். கர்த்தர் கொடுத்த சமாதானத்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். சகோதரர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். சகோ. டேவிட் கண்ணன், மதுரை